fbpx

திருப்பதி கோவிலுக்கு செல்பவர்களுக்கு முக்கிய செய்தி.! ஏமாந்து விடாதீர்கள்.!

புரட்டாசி மாதத்தில் அதிகப்படியானோர் திருப்பதி கோவிலுக்கு செல்வார்கள். ஆனால், சிலரோ புரட்டாசி மாதத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் புரட்டாசி முடிந்தவுடன் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பார்கள்.

அடுத்த வாரத்தில் 12 மணி நேரங்கள் திருமலையில் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, உங்களது பயணத்தை அதற்கேற்றபடி திட்டமிட்டு கொள்ளுங்கள்.

இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில். இதில் இந்தியா மட்டுமல்லாமல் உலகில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா குறைய துவங்கிய பின்னர் மீண்டும் தரிசனம் ஆரம்பிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் அடுத்த வாரம் அக்டோபர் 25ஆம் தேதி மாலை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. எனவே, அன்று காலை 8 :11 மணிக்கு நடை சாத்தப்பட உள்ளது. அதன் பின் மீண்டும் இரவு 7:30க்கு தான் நடை திறக்கப்படும் எனவே பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Baskar

Next Post

தகாத வார்த்தை.. அவமானத்தில் உயிரை விட்ட திமுக பிரமுகர்.! கைதான பாஜக நிர்வாகி.!

Sun Oct 16 , 2022
தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அருகே செட்டிப்பட்டி பகுதியில் கோவிந்தசாமி (48 வயது) என்பவர் திமுக கிளைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். அதே பகுதியில் பாஜக ஒன்றிய தலைவரான ராஜசேகர் என்பவருக்கு கோவிந்தசாமியுடன் முன் விரோதம் இருந்தது. எனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும். கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி கோவிந்தசாமி தன்னுடைய சகோதரி வீட்டிற்கு முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற ராஜசேகர் […]

You May Like