சென்னையில் கும்மிடிப்பூண்டி அடுத்த பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவருக்கு திலகா (வயது 37) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 15 வயது மகள் உஷாவுடன் திலகா நெல்வாய் கிராமத்தில் சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
உஷா, பெரியபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற உஷா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர்.
இதனையடுத்து , கடந்த 23ம் தேதி காலை கொள்ளனூர் ஏரிக்கரையில் சிறுமி சடலம் ஒன்று கிடப்பது பற்றி அறிந்த பாதிரிவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டது மாயமான மாணவி உஷா என்பது தெரிய வந்தது.
இவர், மூக்கரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற 19 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே பிரவீனை தேடியபோது, அவர் தலைமறைவாகி விட்டார். நேற்று முன்தினம் இரவு முக்கரம்பாக்கம் காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருந்த பிரவீன் மற்றும் அவரது நண்பர் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
கைதான பிரவீன் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார், “பள்ளிக்கு செல்லும்போது உஷாவுடன் பிரவீனுக்கு பழக்கம் ஏற்பட்டு சில தினங்களில் அது காதலமாக மாறியுள்ளது. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் பிரவீன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என மாணவி பலமுறை பிரவீன்க்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரை தீர்த்துக்கட்ட நண்பனான அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் சேர்ந்து பிரவீன் திட்டம் தீட்டியுள்ளார்.
அவர்களது திட்டத்தின்படி, திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணை , கடந்த 10ம் தேதி பிரவீன் அழைத்துள்ளார். ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்கள்.
இறுதியில் கடந்த 22ம் தேதி இரவு 11 மணிக்கு உல்லாசமாக இருந்துவிட்டு, நண்பரின் துணையுடன் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, சடலத்தை ஏரியில் வீசிவிட்டு தப்பியுள்ளார்கள்.” என்று தெரிவித்தனர். இதையடுத்து , பிரவீனை புழல் சிறையில் அடைத்து அந்த 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.