கர்நாடகா மாநிலத்தில் மணிச்சூழல் என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த ஜர்னி நரசிம்ம குகை கோயில். உலகிலேயே தண்ணீரில் சென்று கடவுளை தரிசனம் செய்து விட்டு வரக்கூடிய ஒரே குகை கோயில் இது மட்டுமே! இந்த பழைமையான கோயில் 300 மீட்டர் குகையில் தோண்டப்பட்ட சுரங்கப் பாதையாக மணிச்சோலா மலைத்தொடரில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது 108 அபிமான க்ஷேத்ரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த குகையில் தாராளமாக எட்டு நபர்களால் மட்டுமே நின்று தரினம் செய்ய முடியும். அதனால் மற்ற பக்தர்கள் தன்னுடைய முறை வரும் வரை தண்ணீரிலேயே காத்திருக்க வேண்டும். இங்கே குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் தண்ணீரிலே நடந்து வரும் காட்சியைக் காணலாம். அந்த குகை கோயிலில் இருக்கும் தண்ணீரில் சல்பர் இருப்பதால் அது பலதரப்பட்ட சரும நோய்களை குணப்படுத்தவல்லது என்று கூறப்படுகிறது. திருமணமான தம்பதிகள் பலர் குழந்தை பேறுக்காக இந்த நரசிம்மரை வேண்டுவது வழக்கமாகும்.
கோடைகாலத்திலும் கூட இந்த குகை கோயிலில் மார்பளவு தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த குகை கோயிலில் தண்ணீர் ஊற்றாக எங்கிருந்து வருகிறது என்பதை குறித்து யாருக்கும் தெரியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. மேலும் இந்த தண்ணீரில் பல மூலிகைகளின் மருத்துவ குணம் கலந்துள்ளதால் இதில் நீந்தி செல்பவருக்கு எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் குணமடையும் என்று நம்பப்பட்டு வருகிறது.
குகையின் முடிவில் நரசிம்ம சிலையும், சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நரசிம்மர், வதம் செய்த அசுரன் மனம் வருந்தி நரசிம்மரிடம் வேண்டியதால் அவருக்கு தண்ணீராக மாறும் சக்தி கொடுத்து அவரின் காலடியிலேயே தண்ணீர் ஊற்றாக இருக்குமாறு வரம் தந்தார். இதனாலையே இக்கோயிலில் மார்பளவு தண்ணீர் எப்போதும் இருந்து வருகிறது என்பது இக்கோயிலின் வரலாறாக கூறப்பட்டு வருகிறது. மேலும் எந்தவித நவீன பொருட்களும் இல்லாத காலத்தில் இவ்வளவு பெரிய குகைக்கோயில் எப்படி கட்டப்பட்டது என்பது குறித்து பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்து வருகிறது.
Read more ; பொங்கல் பண்டிகை.. நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்..!! – போக்குவரத்து துறை