fbpx

இந்த கோயிலில் தூண்கள் விழுந்தால் உலகம் அழிந்துவிடும்.! சாஸ்திரம் சொல்வது என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கிரேஷ்வர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் தான் ஹரிஷ்சந்திரகட் என்று அழைக்கப்படும் கோயில். கிபி ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் கேதரேஸ்வரர் என்ற குகை அமைந்துள்ளது.

மேலும் இந்த குகையினுள் 5 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் அதனை சுற்றி நீரால் சூழப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை காண வேண்டும் என்றால் இந்த குளிர்ச்சி நிறைந்த நீரை கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் இக்குகை முழுவதுமாக நீரால் மூடப்பட்டு விடும். சிவலிங்கத்தை சுற்றி நான்கு மிகப்பெரும் தூண்கள் இருந்துள்ளன.

இந்த தூண்களில் மூன்று தூண்கள் கீழே விழுந்து விட்டன. மீதமிருக்கும் ஒரு தூண் கீழே விழுந்தால் உலகம் அழிந்து விடும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சிவலிங்கத்தை சுற்றியுள்ள தூண்களில் நாலு வகையான யுகங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு யுகமும் முடிய முடிய இந்த தூண்கள் கீழே விழுந்து விடும்.

இறுதியாக தற்போது நடந்து வரும் கலியுக தூண் மட்டும் மீதம் உள்ளது. இந்த தூண் கீழே விழும்போது கலியுகம் முடிவுக்கு வரும் என்றும், இதனால் உலகமும் அழிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு மக்கள் பல வகையான பரிகாரங்கள் மற்றும் பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் செய்து வேண்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Shocking information stated in the scriptures.! If the pillars fall in this temple, the world will be destroyed

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? நாளை முதல் ஆரம்பம்..!! வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Thu Jun 6 , 2024
If you have applied for a ration card, good news is likely to come your way from tomorrow.

You May Like