fbpx

நெய் விற்றே கோடிகளில் புரண்ட நபர்….! 1 கிலோவே 6 லட்சமா..? அப்படி இந்த நெய்யில் என்னதான் ஸ்பெஷல்….?

குஜராத்தைச் சேர்ந்த ராமேஷ்பாய் ருபரேலியா நெய் வியாபாரம் செய்து, மாதம் 40 லட்சம் வரையில் சம்பாதித்து வருகிறார் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா? இவர் 200க்கும் மேற்பட்ட பசுக்களை வைத்திருக்கிறார். பசுவின் பாலை விற்பதற்கு பதிலாக, நெய், மோர் என்று விற்பனை செய்து வருகிறார். ஒரு கிலோ நெய் 3500 முதல், 2 லட்சம் வரையில் விற்பனை செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.

பழங்காலத்து நூல்களை பார்த்து, அதனை பின்பற்றி, பல மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் போன்றவற்றை இந்த நெய்யில் இணைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் ஒரு கிலோ சில நேரங்களில் 6 லட்சம் வரையில் கூட விற்பனை ஆகிறதாம். ஒரு கிலோ நெய் தயாரிப்பதற்கு 31 லிட்டர் பால் தேவைப்படுகிறது. நெய் உற்பத்தியில் இருந்து, பேக்கேஜிங் மற்றும் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்வது வரை இந்த வணிகம் சுமார் 140 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கின்றது. ரமேஷ்பாய் கடந்த 17 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்.

ரமேஷ் பாய் இந்த நெய்யை உருவாக்குவதற்கு வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிக்கிறார். அதனால் தான் இங்கே தயாரிக்கப்படும் நெய் மிகவும் விலை உயர்ந்தது என கூறப்படுகின்றது. மக்கள் இந்த நெய்யை விரும்பி வாங்கி செல்கிறார்கள்.

இவருடைய தயாரிப்புகளுக்கு அமெரிக்கா, கனடா, சவுதி அரேபியா போன்ற பல நாடுகளில், அதிக தேவை இருக்கிறது. இவர் தன்னுடைய பொருட்களை விற்பனை செய்து மாதம் 40 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கிறார். ஒரு வருடத்திற்கு மூன்று முதல் நான்கு கோடி வரையில் சம்பாதிக்கிறார்.

இந்த நெய் தலைவலி, தோல் பிரச்சனைகள் மற்றும் இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் வழங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல், இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் கண்களுக்கு கீழே இருக்கின்ற கருவளையம் மற்றும் முகப்பரு போன்றவற்றை குறைப்பதற்கும் உதவியாக உள்ளது.

Next Post

இன்று சூரிய கிரகணம்.! கர்ப்பிணி பெண்களே மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்….!

Sat Oct 14 , 2023
சூரியன், சந்திரன், பூமி உள்ளிட்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கக்கூடிய ஒரு நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் பூமியிலிருந்து பார்க்கும் போது சூரியனின் ஒளியை சந்திரன் ஒரே நேர்கோட்டில் வந்து மறைக்கக் கூடிய நிகழ்வு தெரியும் . அந்த விதத்தில், இந்த வருடம் நிகழும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி, அதாவது இன்று நிகழ உள்ளது. இந்திய […]

You May Like