காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேவிப்பட்டினம் இறால் பண்ணை அதிபர் முனியசாமிக்கு ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் உறுதி அளித்துள்ளார். பின்னர் கடன் பெற ஆவணச் செலவுக்காக ரூ.14 லட்சம் வேண்டும் என்று முனியசாமியிடம் கேட்டுள்ளார். இதை நம்பிய முனியசாமி ரூ.14 லட்சத்தை பவர் ஸ்டாருக்கு கொடுத்துள்ளார். பின்னர், பவர் ஸ்டார் கடன் வாங்கி தராததால் பணத்தை திருப்பி கேட்டபோது பவர் ஸ்டார் ரூ.14 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த ரூ.14 லட்சத்துக்கான காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. இதனால் முனுசாமி கடன் பெற ஆவணச் செலவுக்காக வாங்கிய ரூ.14 லட்சம் பணத்தை தர வேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடிகர் பவர் ஸ்டாருக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.