fbpx

Lok Sabha | “இந்தக் கூட்டணி சீட்டுக்காக அல்ல வெற்றிக்காக”… பாஜக – அமமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் பேட்டி.!!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது . இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகள் விரைவாக தங்களது கூட்டணியை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது

தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான மும்முனைப் போட்டி நிலவுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து இன்று தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதிமுக வருகின்ற 22 ஆம் தேதி தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான டிடிவி தினகரன் 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பாஜக உடன் கூட்டணி அமைத்தார். அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய பிறகு ஓபிஎஸ் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். டிடிவி தினகரன் அவராகவே விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இவரது கட்சியான அமமுக வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி உட்பட 5 அல்லது 6 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி இருக்கிறது. இது தொடர்பாக பேசிய டிடிவி தினகரன்” பாஜக தங்களுக்கு முதலில் அதிக தொகுதிகள் தருவதாக தெரிவித்தது. ஆனால் அதிகமான கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைந்ததால் அனைவருக்கும் தொகுதி பங்கீடு செய்ய வேண்டி இருக்கிறது. எத்தனை தொகுதிகளில் போட்டி போடுகிறோம் என்பது முக்கியமல்ல வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம். இந்த முறை நிச்சயமாக வென்று கோப்பையை கைப்பற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார் மேலும் கூட்டணி பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே தனக்கு ஒரு தொகுதி கொடுத்தால் கூட போதும் என தெரிவித்ததாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

Read More: CM Stalin | பிரதமர் வேட்பாளர் யார்..? நச்சுன்னு பதில் கொடுத்த முதல்வர் முக.ஸ்டாலின்..!!

Next Post

Lok Sabha | தஞ்சை, விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு..!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

Wed Mar 20 , 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுகவை பொறுத்தவரை எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளும், தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட 16 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அதிமுக […]

You May Like