CM Stalin | பிரதமர் வேட்பாளர் யார்..? நச்சுன்னு பதில் கொடுத்த முதல்வர் முக.ஸ்டாலின்..!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் திமுகவுக்காக நன்றாக பிரசாரம் செய்து வருகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முதல்வரிடம் முன் வைத்தனர். இதற்கு பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின், “நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கிருக்கும் ஆளுநர் ஒருவரே போதும். திமுகவுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று. அதேபோல, இப்போது பிரதமரே போதும். அவரே எங்களுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

மேலும், நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது குடும்பக் கட்சிதான். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு குடும்பப் பாச உணர்வோடு, கருணாநிதி, அண்ணா தொடங்கி வைத்திருக்கிறார்கள். உழைப்பின் அடிப்படையில்தான் பொறுப்புகளும், பல பணிகளும் கொடுக்கப்படுகிறதே தவிர, வாரிசு அடிப்படையில் கொடுக்கப்படுவது அல்ல என பதிலளித்தார். அதிமுக, பாஜக குறித்த கேள்விக்கு, பாஜக வளர்ந்து வருகிறது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு யார் வளர்ந்திருக்கிறார்கள்? யார் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்? யார் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்? யார் நோட்டாவைவிடக் குறைவாக வாக்கு வாங்குகிறார்கள்? என்பது தெரியவரும் என்றார் முதல்வர் ஸ்டாலின். உங்கள் மனதின்படி பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவீர்கள்? என்ற கேள்விக்கு “இந்தியாதான்” கூட்டணியின் வேட்பாளர் என்று பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

Read More : BREAKING | முன்கூட்டியே நீட் தேர்வு..!! ஜூலை 7ஆம் தேதி கிடையாது..!! திடீர் மாற்றம்..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

Chella

Next Post

Lok Sabha | "இந்தக் கூட்டணி சீட்டுக்காக அல்ல வெற்றிக்காக"… பாஜக - அமமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் பேட்டி.!!

Wed Mar 20 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது . இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகள் விரைவாக தங்களது கூட்டணியை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான மும்முனைப் போட்டி நிலவுகிறது. திராவிட […]

You May Like