சீனாவின் தென்மேற்கு பகுதியான சோன்குயிங் பகுதியில் இந்த சுண்ணாம்பு கரட்டுப் பள்ளம் காணப்படுகின்றது. ண்ணாம்பு கரட்டுப் பள்ளம் அல்லது புதை எனப்படுவது இயற்கையிலேயே நிலத்தில் உருவாகும் பள்ளத்தையே குறிக்கும். 1994ம் ஆண்டே இந்த பள்ளம் வெளி உலகிற்கு அடையாளப்படுத்தப்பட்டது. பாரிய விண்கல் ஒன்று பூமியில் விழுந்த காரணத்தினால் இந்த துளை உருவாகியிருக்கலாம் என சில நிபுணர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.1,28,000 ஆண்டுகளாக சுண்ணாம்பு கற்பாறையில் நீர் கசிந்து கசிந்து இந்த பள்ளம் உருவாகியுள்ளது என மற்றுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்த பள்ளத்தின் ஆழம் 660 மீட்டர், இதன் கனவளவு 130 கன மீட்டர்களாகும். சீனாவின் ஸியாஸோய் டியான்கென் (Xiaoxhai Tiankeng) பள்ளமே உலகின் ஆழமானதும் விசாலமானதுமான சுண்ணாம்பு கரட்டுப் பள்ளம் என்பது குறிப்பிடத்தக்கது. Tiankeng என்பதன்பொருள் சொர்க்கத்தின் குழி என்பதாகும். இந்தப் பகுதி வேறு ஓர் உலகினைப் போன்று பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதியின் இயற்கை பல்வகமை ஆச்சரியப்படுத்தும் வகையிலானது. 1285 தாவரங்கள் மற்றும் மிருகங்கள் இந்த பகுதியில் காணப்படுகின்றன.
இந்தப் பள்ளம் பற்றி உள்ளுர் மக்கள் அறிந்திருந்தாலும், 1994ம் ஆண்டின் பின்னரே வெளி உலகிற்கு இந்த பள்ளம் பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த பள்ளத்தின் நிலக்கீழ் குளத்தை முழுமையாக படமெடுப்பதற்கு பத்து ஆண்டுகளில் ஐந்து தடவைகள் எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த ஆழமான இருள்சூழ்ந்த சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளம் சீனாவின் புவியியல் ரீதியான மர்மங்களின் ஒன்றாக திகழ்கின்றது.