விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராங்கிங் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் முதலாவது நிலை டைட்டில் வின்னருக்கான ராங் ஆகவும் 15-வது ராங் எலிமினேஷாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த போட்டியில் போட்டியாளர்கள் அனைவருமே பங்கு பெறுகின்றனர்.
இதனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் ஒவ்வொரு இடத்தில் நிற்கின்றனர். அப்போது பிரதீப் முதலாவது இடத்தில் நிற்பதால் எல்லோரும் திட்டுகின்றனர். இரண்டாவது இடத்தில் ஜோவிகா இருக்கிறார். பிரதீப் , ஜோவிக்கவை பார்த்து நீ மிடில் கிளாஸ் என்று சொல்லாத என்று சொல்ல ஜோவிகா நான் அங்க இருந்துதான் வந்தேன் என்று ஜோவிகா கூறுகிறார். இவர்களுக்கிடையில் இப்படியே வாக்குவாதம் நடைபெறுவது போல ப்ரோமோ முடிவடைகிறது.