fbpx

இதுவே முதன்முறை… 4500 ஆண்டுகள் பழமையான பிரமிடில் ரகசிய நடைபாதை கண்டுபிடிப்பு…

எகிப்தின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களாக பிரமிடுகள் உள்ளன..இவை பண்டைய எகிப்தியர்களால் கட்டப்பட்டவை.. மிகவும் பிரபலமான எகிப்திய பிரமிடுகள் கெய்ரோவின் புறநகரில் உள்ள கிசாவில் காணப்படுகின்றன. பல கிசா பிரமிடுகள் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளன.. அந்த வகையில், குஃபு பிரமிடு மிகப்பெரிய எகிப்திய பிரமிடு ஆகும்.

இந்நிலையில் கிசா பிரமிடில் முதன்முறையாக ரகசிய நடைபாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பை எகிப்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. பிரமிடுகளின் கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக 2015 “சர்வதேச பிரமிட் ஆய்வு திட்டம்..” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.. தீங்கு விளைவிக்கும் துளையிடும் முறைகளைப் பயன்படுத்தாமல் விஞ்ஞானிகள் பிரமிடுகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.. இந்த திட்டத்தின் கீழ் பழமையான பல்வேறு பிரமிடுகள் ஆய்வு செய்யப்பட்டன..

அந்த ஆய்வில் எகிப்தில் அமைந்துள்ள 4,500 ஆண்டுகள் பழமையான கிசா பிரமிடில் ரகசிய பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை 9 மீட்டர் நீளமும் 2.10 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கண்டுபிடிப்பு மேலும் பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும்” என்று எகிப்திய அரசாங்கம் கூறியுள்ளது.

பிரமிடின் வடக்கு பக்கத்திற்கு பின்னால் இந்த நடைபாதை உள்ளது.. எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு அதை ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் பேசிய போது “நாங்கள் எங்கள் ஆய்வை தொடரப் போகிறோம், இந்த நடைபாதையின் முடிவில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம்” என்று தெரிவித்தார்.

எகிப்தில் உள்ள கிசாவின் பண்டைய பிரமிடு, உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.. இந்த அற்புதமான அமைப்பு கிமு 2560ல் பாரோ குஃபு ஆட்சியின் போது ஒரு நினைவுச்சின்ன கல்லறையாக கட்டப்பட்டது. இதன் உயரம், தற்போது 139 மீட்டராக உள்ளது. 1889ல் பாரிஸில் ஈபிள் கோபுரம் கட்டப்படும் வரை, இது மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உயரமான கட்டிடமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

Maha

Next Post

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்…..! தமிழகம் வருகிறது பீகார் குழு……!

Sat Mar 4 , 2023
தமிழகத்திற்கு வேலை தேடி வந்திருக்கின்ற வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவத் தொடங்கினர். அதோடு, வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் பீஹார் மாநில சட்டசபையில் நேற்று எதிரொலித்தது இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த பிரச்சனையை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழகத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் […]

You May Like