fbpx

உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் இதுதான்!… எங்கு உள்ளது? என்னென்ன சுவாரஸியங்கள் தெரியுமா?

உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சைல் என்ற மலைவாசஸ்தலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

1893-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 7,500 அடி உயரத்தில் உள்ளது. சட்லஜ் பள்ளத்தாக்கு, சிம்லா மற்றும் கசவுலி ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளை இரவில் பார்வையாளர்கள் இங்கிருந்து கண்டுகளிக்கலாம்.
இந்த மைதானத்தை கிரிக்கெட் பிரியரான பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் உருவாக்கினார். மேலும் கூடைப்பந்து மைதானமும், கால்பந்து விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் கோல் கம்பங்களும் அமைந்துள்ளன. பல சர்வதேச மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன.

பனிப்பொழிவுக்குப் பிறகு குளிர்காலத்தில் கிரிக்கெட் மைதானம் மூடப்பட்டிருக்கும் என்றாலும், மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கிரிக்கெட் விளையாடுவது இனிமையான அனுபவமாக இருக்கும். இங்கு வெப்பநிலை 15 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட பிறகு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் இந்த மைதானம் உருவாகியுள்ளது.

Kokila

Next Post

இனிமேல் பெட்ரோல் தேவையில்லை!... பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனம்!... அமெரிக்கா இளைஞர் சாதனை!

Tue May 16 , 2023
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் பீர் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்தவர் கேஒய்.மைக்கல்சன் என்ற இளைஞர். இவர், பீரால் இயங்கும் இரு சக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த வாகனத்தில் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுவிற்கு பதிலாக பீர் பயன்படுத்தப்படுகிறது.இந்த வாகனத்தில் உள்ள என்ஜின் பீரை 300 டிகிரி வரை சூடாக்கி, பின்னர் அதனை நீராவியாக மாற்றி […]

You May Like