உலகில் பல விலையுயர்ந்த பொருட்கள் உள்ளன.. அந்த பொருட்களை வாங்க வேண்டும் என்று சாமானிய மக்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.. அவ்வளவு ஏன், பெரும் பணக்காரர்கள் கூட அவற்றை வாங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்த விலையுயர்ந்த பொருட்களில் மரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தனம் மிகவும் விலை உயர்ந்தது என்று ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் அதை விட விலை உயர்ந்த மரம் இருக்கிறது..சந்தன மரம் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டாலும், இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.5000 முதல் 6000 வரை இருக்கும், ஆனால் சந்தன மரத்தை விட பல மடங்கு அதிகம் உள்ள மரம் குறித்து பார்க்கலாம்..
இந்த மரத்தின் பெயர் ஆப்பிரிக்க பிளாக்வுட் (African Blackwood).. இந்த மரம் பூமியில் மிகவும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் விலை கிலோ 7 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.. இந்த விலையில் நீங்கள் ஒரு நல்ல சொகுசு காரை எளிதாக வாங்கலாம்.
இந்த மரம் மிகவும் அரிதானது என்றாலும். இந்த மரம் மத்திய மற்றும் தென்னாப்பிரிக்காவின் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்பட்டாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளில் செனகல் கிழக்கு முதல் எரித்திரியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றின் உயரம் சுமார் 25-40 அடி. அவை பெரும்பாலும் வறண்ட இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
ஆனால் இந்த மரத்தின் சட்டவிரோத கடத்தல் பல நாடுகளில் தொடர்கிறது. இதனால்தான் இந்த மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அரிய வகை மரங்களின் கீழ் வந்துள்ளது.. கென்யா, தான்சானியா போன்ற நாடுகளில் ஆப்பிரிக்க பிளாக்வுட் மரத்தை கடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க பிளாக்வுட் மரம் பெரும்பாலும் புல்லாங்குழல் மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இது தவிர, வலுவான மற்றும் நீடித்த தளபாடங்கள் இந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் ஒரு சிலர் மட்டுமே இதை வாங்குகின்றனர்.