fbpx

பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய முல்லை இவர்தானாம்!

பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா விலகியதை அடுத்து அடுத்த முல்லையாக சிப்பிக்குள் முத்து நடிகை நடிக்க உள்ளாராம்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுமார் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்திருந்தார். அனைவரின் மனதையும் கவர்ந்த சித்ரா 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஹோடெலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்தான் காவ்யா அறிவுமணி . இவரும் தற்போது சீரியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.

எனவே முல்லை கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வரும் லாவண்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டு நடிக்க உள்ளார்.

https://www.instagram.com/p/CjiCMydrIRP/?utm_source=ig_web_copy_link

Next Post

’செல்லோஷோ’ திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் மரணம்..

Wed Oct 12 , 2022
குழந்தை நட்சத்திரமாக ’செல்லோஷோ ’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவன் புற்று நோயால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தி திரைப்படமான ’ செல்லோ ஷோ ’ என்ற திரைப்படம் சிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2023ம் ஆணடு தேர்வு செய்யப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரமாகவும், 6 குழந்தைகளில் ஒருவராகவும் நடித்துள்ள ராகுல் கோலி என்பவர் புற்று நோயால் மரணம் […]

You May Like