தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டில் விஜய்யை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 100 அடி உயர கம்பத்தில் தவெக கொடி ஏற்றப்பட்டது. ஆரவாரமுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தவெக தலைவர்கள் விஜய் உட்பட அனைத்து தொண்டர்களும் எழுந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். பின்னர் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் “வெற்றி… வெற்றி…” எனத் தொடங்கும் கொள்கைப்பாடல் வெளியிடப்பட்டது. மதசாப்பற்ற சமூகநீதி கொள்கை வழியில் 5 தலைவர்களை கொண்டு தவெக பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
தவெக கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்தார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் மக்கள் அனைவரும் பிறப்பால் சமம். பாரபட்சமற்ற சமூகம் படைப்பது என்பது எங்களது கோட்பாடாகும். தவெகவின் குறிக்கோள் மதம், சாதி, நிறம், இனம், பாலின அடையாளம் என்ற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகங்களை சுருக்காமல், தமிழ்நாட்டு மக்களில் வாழும் அனைத்து மக்களின் சமூக பொருளாதார அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தி சமநிலை சமூகம் உருவாக்குவது தமிழக வெற்றி கழகத்தின் குறிக்கோள்.
Read More : TVK Vijay | 101 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய்..!!