fbpx

‘சினிமாவில் இருந்து விலக இது தான் காரணம்..’ – நடிகை பாவனா ஓபன் டாக்!

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே மிக பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தீபாவளி திரைப்படத்தில் நடந்திருந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒரு ரவுண்டு வந்த பாவனா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பும் போது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிலிருந்து மீண்ட பாவனா, கடந்த 2018 ஆம் ஆண்டு, கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகியே இருந்தார் பாவனா. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாவனா, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்தது, வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பினார்கள், சிலருடன் இணைத்தும் பேசினார்கள்.

ஒருகட்டத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே இறந்து விட்டதாக வதந்திகளை உருவாக்கினார்கள். எனக்கு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியே வர சில காலம் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். தற்போது மீண்டும் பிஸியாக நடித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Next Post

ஜெயக்குமார் மர்ம மரணம்: விசாரணையில் மழுப்பிய ரூபி மனோகரன் MLA.!! வெளியான பரபரப்பு தகவல்.!!

Tue May 7 , 2024
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போன நிலையில் தோட்டத்திலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை மர்ம மரணமாக பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி MLA ரூபி மனோகரனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. மேலும் இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் கடிதம் எழுதி இருந்த ஜெயக்குமார் அதில் முன்னாள் அமைச்சர் […]

You May Like