fbpx

உங்கள் சிறுநீரகம் கெட்டுப்போக இதுதான் காரணம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீங்க..!! உடனே இதை பண்ணுங்க..!!

நம்முடைய உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் கெட்டுப் போவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பலர் தெரியாமல் இருந்து வருகின்றனர். நம்முடைய உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பு, சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுதல் பணியை செய்கின்றன. செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகிறது. ஆனால், இதய நோய்கள், சர்க்கரை நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் போல சிறுநீரக பிரச்சனைகளும் பயங்கரமானவை என்று சொல்லப்படுகிறது. இந்த சிறுநீரகப் பிரச்சனை எப்படி ஏற்படுகின்றன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல் முறையில், பிரச்சனை ஏற்படலாம். இதன் காரணமாக, அந்த கழிவுகள் இரத்தத்தில் கலந்து, வாயின் வழியே துர்நாற்றம் வீசும். சிறுநீரகங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.

இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகளின் விளைவு காரணமாக, அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்டவை உண்டாகலாம். சிறுநீரக செயல்பாடு குறைந்து காணப்பட்டால், இரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து, சோர்வு மற்றும் மூளை குறித்த பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும். சிறுநீரகம் அமைந்திருக்கின்ற பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும். இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறி என்று கூறப்படுகிறது.

Read More : ’இதுதான் ரூல்ஸ்’..!! ’இனி மீறினால் ஆக்‌ஷன் தான்’..!! கிளாம்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!

English Summary

If the color of your urine changes or if it looks abnormal, there is a chance that it could be a kidney problem.

Chella

Next Post

“சிந்து நதியை நிறுத்த எந்த திட்டமும் இல்லை... மக்களை ஏமாத்தாதீங்க..” பாஜகவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிரபல சாமியார்..

Mon Apr 28 , 2025
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரபல சாமியார் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், “காஷ்மீரில் ஒரு தாக்குதல் நடந்தது, அரசாங்கம் சார் தாம் யாத்திரையை (உத்தரகண்டில்) ஒத்திவைக்க ஆலோசித்து வருவதாகக் கேள்விப்பட்டேன், ஆனால் யாத்திரை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்துக்களுக்கு சவால் விடும் ஒருவர் இருப்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஒரு சவால் […]

You May Like