fbpx

குங்குமம் வைப்பதற்கு பின், இப்படி ஒரு அறிவியல் காரணமா!!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

பொதுவாக நமது முன்னோர் எதை செய்தாலும் கட்டாயம் அதற்க்கு ஒரு அறிவியல் காரணம் இருக்கும். ஆனால் நாம் பல நேரங்களில் நாகரீகம் என்ற பெயரில், முதியவர்கள் கூறுவதை எல்லாம் மூட நம்பிக்கை என்று கூறி விடுகிறோம். அப்படி ஒரு பழக்கம் தான், திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது. ஆராய்ச்சிகளின் அடிப்படையில், புருவங்கள் இரண்டும் இணையும் இடமான பொட்டு வைக்கப்படும் இடத்தில், மனித உடல் ஒரு சில மின்காந்த சக்திகளை வெளிப்படுத்துகின்றது. இதனால் அந்த இடத்தை மறைத்து குங்குமம் வைப்பதால், இந்த சக்தி விரயமாவது தடுக்கப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல், குங்குமம் அணிவதன் மூலம் பெண்களின் உடல் சூட்டின் காரணமாக வரும் அனைத்து நோயும் கட்டுப்படுத்தப் படுகின்றது.

மேலும், பெண்களின் புருவங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் இருந்து வெளிப்படும் காந்த சக்தியில், ஆண்களை ஈர்க்கும் ஆற்றல் உள்ளது. இதனால் திருமணமான பெண்கள் புருவங்களுக்கு இடையில் குங்குமம் வைத்தால், மற்ற ஆண்களை ஈர்க்கும் ஆற்றல் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் குங்குமம் வைப்பதனால், ஆழ்ந்த சிந்தனையினால் ஏற்படும் தலைவலி, தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஆகியவை ஏற்படாமல் தடுக்க, புருவத்தில் உள்ள நரம்புகளை தூண்டுவதற்கு குங்குமம் சிறந்த உதவியாக இருக்கும். இது மட்டும் இல்லாமல், சுண்ணாம்பு, படிகாரம் மற்றும் மஞ்சள் ஆகியவை கொண்டு குங்குமம் தயாரிக்கப்படுவதால், குங்குமம் வைப்பவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Maha

Next Post

SBI வங்கியில் 400-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்...! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்...!

Wed Oct 11 , 2023
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager, Deputy Manager, Manager, Senior Project Manager, Chief Manager பணிகளுக்கு 439 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 32 முதல் 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் B.E.., B.Tech., MCA.., படிப்பு முடித்தவராக […]

You May Like