fbpx

புற்றுநோய் அறிகுறி இதுதான்!… நீங்கள் சாப்பிடும்போது கண்டுபிடிக்கலாம்!… மருத்துவர் விளக்கம்!

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நுரையீரல், கல்லீரல், வாய் என நம்முடைய உடல் உறுப்புகள் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இன்றைக்கு தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? என்பதைக் குறித்து விளக்கமளிக்கிறார் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மருத்துவர் மன்தீப் சிங் மல்ஹோத்ரா.

பொதுவாக தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலை பயன்பாடு முதன்மையான ஆபத்து காரணியாக உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் புகையிலை மற்றும் பான் மெல்லுதல் ஆகியவற்றின் பயன்பாடு காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இதோடு மது அருந்துதல், புகையிலை பயன்பாட்டு அதிகரிக்கும் போது தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

தொண்டை புண், தொடர்ந்து இருமல், விழுங்குவதில் சிரமம், பேசுவதற்கு சிரமம், காதுவலி, கழுத்தில் கட்டி ஏற்படுதல், சொல்ல முடியாத அளவிற்கு எடை இழப்பு போன்றவற்றை இந்நோய்க்கான அறிகுறிகளாக உள்ளன. எனவே ஏதேனும் தொடர்ச்சியான இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

தலை மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது நாக்கு, தொண்டை அல்லது குரல்வளை ஆகிய பகுதிகளை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நடைமுறைகள் சில நேரங்களில் பேச்சு மற்றும் விழுங்கும் திறன்களை நேரடியாகப் பாதிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், செயல்பாட்டை மீட்டெடுக்க மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோடு மட்டுமின்றி வழக்கம் போல் கீமோதெரபி சிகிச்சையும் செய்யப்படுகிறது.

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களைத் தடுக்க முடியாது என்றாலும், சில தடுப்பு நடவடிக்கைகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். புகையிலை பொருட்களைப் பயன்படுத்துதல், மது அருந்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான புகையிலையையும் தவிர்ப்பது மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

Kokila

Next Post

’என்ன செய்தாலும் இந்த 5 இடங்களுக்கு மட்டும் யாராலும் செல்ல முடியாது’..!! அப்படி என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா..?

Thu Aug 17 , 2023
உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. தற்போதைய தொழில்நுட்பங்களை கொண்டு செவ்வாய் கிரகத்திற்கு கூட சென்று வந்துவிடலாம். ஆனால், சில இடங்களில் என்ன செய்தாலும் மக்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அப்படியான 5 இடங்கள் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பாம்பு தீவு (பிரேசில்) : பெயருக்கு ஏற்றார் போலவே இந்த ஆபத்தான தீவில் ஆயிரக்கணக்கான அதிக விஷமுள்ள பாம்புகள் உள்ளன. இதன் காரணமாக இன்று […]

You May Like