fbpx

”இது ரொம்ப மோசம்”..!! ”மொத்த மக்களையும் அழிக்க வரும் புதிய தொற்று”..!! நிபுணர்கள் எச்சரிக்கை..!!

சமீப ஆண்டுகளாக மனித குலங்களைத் தாக்கும் பல்வேறு நோய்க் கிருமிகளின் பரவி வரும் நிலையில், அடுத்ததாக வரவிருக்கும் டிசிஸ் எக்ஸ் (Disease X) மிகப்பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்று கோவிட் தொற்றுக்கு லண்டன் தடுப்பூசியைக் கண்டுபிடித்த Taskforce ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கேட் பிங்க்ஹாம் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2.5 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது. தற்போது டிசிஸ் எக்ஸ் என்று அழைக்கப்படக் கூடிய தொற்று 50 மில்லியன் மக்களை கொல்லக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1918-1920 இல் பேரழிவை ஏற்படுத்திய ஸ்பானிஷ் காய்ச்சலுடன் ஒப்பிடுகிறார்கள். இது 50 மில்லியன் மக்களை உயிர்ப்பலி வாங்கியது. முதலாம் உலகப் போரில் கொல்லப்பட்டதை விட இந்த காய்ச்சல் ஏற்படுத்திய உயிரிழப்புகள் இரண்டு மடங்கு அதிகம்.

சமீப காலங்களில் ஏற்படுகிற பல பெருந்தொற்றுக்களும், வைரஸ்களும் இதுபோல தொடர்ச்சியாக லட்சக்கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் தொற்றுக்கள் இன்றைக்கும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் உயிர் வாழ்ந்து வெவ்வெறு திரிபுகளால் மக்களை பாதித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அடுத்த தொற்றுநோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். தொற்றுநோய்க்கான தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் X என்பது ஒரு தீவிரமான மனித நோயை ஏற்படுத்தும் என்றும் தற்போது அறியப்படாத ஒரு நோய்க்கிருமியால் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கின்றனர். சில பொது சுகாதார வல்லுநர்கள் அடுத்த நோய் X ஜூனோடிக் என்று நம்புகிறார்கள். அதாவது இது காட்டு அல்லது வீட்டு விலங்குகள் மூலம் பரவும். பின்னர் எபோலா, எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் கோவிட்-19 போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை முதலில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது.

Chella

Next Post

அதிர்ச்சி சம்பவம், பள்ளி பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல்....! அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ, 5 பேர் பரிதாபபலி....!

Tue Sep 26 , 2023
கேரளாவில், ஒரு தனியார் பள்ளி பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட, ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த நான்கு முஸ்லிம் பெண்கள், ஒரு ஆட்டோவில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் ஒரு தனியார் பள்ளி பேருந்து, குழந்தைகளை இறக்கி விட்டு எதிரே வந்து […]

You May Like