fbpx

அடுத்த 5 நாட்களுக்கு இதுதான் நடக்கும்..!! வானிலை மையம் சொன்ன ஷாக்கிங் ரிப்போர்ட்..!!

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இயல்பிலிருந்து வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று முதல் 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தில் லாக்டவுன் போடப்படுமா..? மருத்துவத்துறை அமைச்சர் சொன்ன தகவல்..

Fri Apr 7 , 2023
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை […]

You May Like