fbpx

இதனால்தான் ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்தேன்!… காரணத்தை கூறிய முகமது சிராஜ்!

ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்ததற்கு, அது விளையாட்டில் ஒரு பகுதி என முகமது சிராஜ் கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்கத்தில் சில விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி விரைவாக இழந்தாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அணியில் பொறுப்புடன் விளையாடி வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் நேற்று பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சிராஜ் பவுலிங் செய்ய வரும்போது, மைதானத்தின் ஸ்பைடர் கேமராவால் கவனம் சிதறிய ஸ்மித் பேட்டிங்கில் இருந்து விலகினார். இதையடுத்து கோபத்தில் சிராஜ் பந்தை ஸ்மித்தை நோக்கி வீசினார்.

இது குறித்து பதில் அளித்த சிராஜ், ஆட்டத்தில் இது போன்று நடைபெறுவது இயல்பு, ஆட்டத்தில் நம்மை அவ்வப்போது புத்துணர்வாக வைப்பதற்கு இவ்வாறு நடந்து கொண்டால் மனம் கொஞ்சம் நிம்மதியாகும். நாங்கள் களத்தில் நீண்ட நேரம் விளையாடினோம், அதேநேரம் நான் விக்கெட் விழாத விரக்தியில் இருந்ததாகவும் ஒத்துக்கொண்டார்.

Kokila

Next Post

ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்!... ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக பார்க்கலாம்!

Sat Jun 10 , 2023
ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் ஆசியக்கோப்பை மற்றும் ஒருநாள் உலக்கோப்பை போட்டிகளை ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக […]

You May Like