fbpx

’கொடிய விஷமுள்ள பாம்பு கடித்தாலும் இனி கவலை இல்லை’..!! ஆராய்ச்சியாளர்கள் சொன்ன குட் நியூஸ்..!!

அதிக விஷமுள்ள பாம்புகள் கடித்தால் விஷ முறிவுக்கு ‘ஹெபரின்’ போன்ற ரத்த உறைதல் தடுப்பு மருந்துகளே போதும் என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் டிராபிகல் மருத்துவ லிவர்பூர் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ‘ஹெபரின்’ என்ற சாதாரணமாக ரத்த உறைதலுக்கு பயன்படுத்தும் மருந்துகளே போதும் என்று கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அறிவியல் மொழிபெயர்ப்பு மருத்துவம் என்ற மருத்துவ இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில் “ரத்த உறைதலைத் தடுக்கப் பயன்படும் ‘ஹெபரின்’ போன்ற சாதாரண மருந்துகளே நாகப்பாம்பு உள்ளிட்ட கொடிய விஷமுள்ள பாம்புகள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மனிதர்களைக் காக்க உதவும்” என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிட்னி பல்கலைக் கழகப் பேராசிரியர் கிரேக் நீலே தெரிவிக்கையில், “நாகப்பாம்புகள் போன்ற கொடிய விஷமுள்ள பாம்புகள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ஒருவரை காக்க எங்கள் கண்டுபிடிப்பு உதவும். இந்த மருந்து விஷத்தின் வீரியத்தைக் குறைப்பதோடு ரத்த நாளங்கள் சிதைவது, வீக்கம், வலி, கொப்புளங்கள் உள்ளிட்ட பல மோசமான விளைவுகளை தடுக்க உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விஷ பாம்புகளின் விஷ முறிவுக்கு உள்ளூரில் தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளால் எந்த பயனும் இல்லை என்ற நிலையில், தற்போது இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடி மரணங்களை வெகுவாகக் குறைக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க சூப்பர் டிப்ஸ்..!! தினமும் இதை ஃபாலோ பண்ணுங்க..!!

English Summary

A recent study has revealed that anti-coagulants such as heparin are sufficient to break the venom after being bitten by highly venomous snakes like cobras.

Chella

Next Post

மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்

Sun Jul 28 , 2024
Scholarship for students ranging from Rs.1,000 to Rs.25,000

You May Like