fbpx

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்..! பிரதமர் மோடி இரங்கல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வரும் 10ஆம் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்றிரவு நாரா நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில், மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர்.

இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து - பிரதமர் மோடி- ஷின்சோ அபே  மகிழ்ச்சி | PM Modi Calls Friend Shinzo Abe Day After Landmark Military  Agreement With Japan

உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷின்சோ அபே உயிரிழப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஷின்சோ அபே: ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்டதாக தகவல் - BBC News தமிழ்

அந்த வகையில், இந்திய பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். எனது அருமை நண்பர் ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன்.

government and politics

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன. அண்மையில் நான் ஜப்பானுக்கு சென்றேன். இது எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஜப்பானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்தியா முழுவதும் நாளை (9 ஜூலை) ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”அதிமுகவின் 2ஆம் பாகத்தை இனிதான் பார்க்க போகிறீர்கள்”..! ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பரபரப்பு பேட்டி..!

Fri Jul 8 , 2022
அமைதியின் அடையாளம் ஓபிஎஸ் இனியும் அமைதியாக இருக்கமாட்டார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ”கடந்த 2017இல் காமராஜ் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோதே அவர் மீது ஊழல் புகார் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் டிவிஎஸ்-சிக்கு கடிதம் எழுதினேன். அதன் காரணமாக தற்போது […]
”தொண்டர்கள் எங்கள் பக்கம்”..! சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்..! - புகழேந்தி

You May Like