பாஸ்டேக் கட்டண முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி மற்றும் பாஸ்டேக்களுக்குப் பதிலாக புதிய கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வரவுள்ளது உள்ளது. ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் என அழைக்கப்படும் இந்த அமைப்பு, வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்தப் புதிய முறை அமல்படுத்தப்படும். இந்த அமைப்பின் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அதன் பிறகு, வங்கிக் கணக்கில் நேரடியாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதற்காக வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் மாற்றியமைக்கப்படும் தற்போது, மேம்படுத்தப்பட்ட அமைப்பாக, இந்தியாவில் டோல் வசூலுக்கு FASTag பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நெடுஞ்சாலைகளில் சுமூகமான பயணத்திற்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என அரசு தெரிவித்துள்ளது.