fbpx

இணையதளத்தில் வைரலாகும் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் புகைப்படம்! துருக்கி நிலநடுக்கம்!

நேற்று அதிகாலை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை தாக்கியது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்கு இதுவரை 9 ஆயிரத்து 500 பேர் பலியாகி இருப்பதாக  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை  தெரிவிக்கின்றது. 7.8  ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த சோகமான சூழலில் துருக்கி நிலநடுக்கத்தில் திரை மட்டமான வீடுகளுக்குள்  சிக்கி இருந்த இரண்டு குழந்தைகளின் புகைப்படம் உலகையே அதிரச் செய்தது . மேலும் அந்தத்  புகைப்படம்  பார்ப்போம் மனதை நெகிழச் செய்யும் வகையில் இருந்தது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும்  இணையதளத்திலும் அனைவராலும் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலடுக்கத்தால்  அந்த நாடே உருக்குலைந்து  போனது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்  இன்றும் பயங்கர நிலாதிர்கள் உணரப்பட்டு அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி முகம்மது சபா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட  இரண்டு சிறுவர்களைப் பற்றிய ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இந்தப் புகைப்படம்  கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வகையில்  இருந்தது . கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கும் இரண்டு குழந்தைகளைப் பற்றிய புகைப்படம் தான் அது. அந்தப் புகைப்படத்தில் ஒரு சிறுமி  மற்றும் ஒரு சிறுவன் இருவரும்  இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருக்கின்றனர். தனது இளைய சகோதரனின் தலையில் கட்டிடத்தின் இடிபாடுகள் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு தனது  கைகளை தம்பிக்கு பாதுகாப்பாக உனது தலையில்  வைத்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. இதே போன்ற அந்த சிறுமி 17 மணி நேரமாக தனது தம்பியின்  தலையில் பாதுகாப்பாக கை வைத்திருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி  அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்து இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

Baskar

Next Post

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்..!! நாக்பூரில் நாளை தொடக்கம்..!! வெற்றி யாருக்கு..?

Wed Feb 8 , 2023
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தகுதியை தீர்மானிக்கும் தொடர் என்பதால், இது இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும். இதற்கிடையே, முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்கள் தீவிர […]

You May Like