தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆர்சிடி கருவி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஆர்சிடி கருவி தொடர்பாக மின்சார வாரியம் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள் மின் இணைப்புகளில் ஏற்படும், பழுதுகளில் இருந்து சிறிதளவு மின் கசிவு இருந்தாலும், RCD மின்னோட்டத்தை நிறுத்தி விடும். வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது. இந்த சிறிய அக்கறை வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்சிடி என்றால் என்ன..?
ஆர்சிடி என்பது ஒரு பாதுகாப்பு சாதனம். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை துண்டித்துவிடும். RCD-கள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கக் கூடியது. இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்க முடியும்.
உதாரணத்திற்கு, நீங்கள் மின்சார வயரை தொடுகிறீர்கள் என்றால், நேரடியாக மின்சார பகுதியை தொட்ட நபரின் வழியாக, திட்டமிடப்படாத பாதையில் மின்சாரம் பாய்வதைக் கண்டறிந்தால், அது மின்சுற்றை மிக விரைவாக அணைத்துவிடும். இதனால் இறப்பு உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க முடியும்.
Read More : ரூ.1.25 லட்சம் கடன் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்படி விண்ணப்பது..?