fbpx

ஒரே குடும்பத்தில் 3 பேருக்கும் இந்த ராசியா?… மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள்!…

குடும்பத்தில் 3 பேருக்கு ஒரே ராசியாக அமைவது என்பது ஜோதிடர் ரீதியில் மிக மோசமான நிகழ்வாகும். திருமணத்தின் போது மணமக்கள் ஒரே ராசியில்லாமல் அதாவது ஏக ராசி இல்லாத ஜாதகத்தை தான் வைத்து பொருத்தம் பார்த்து சொல்வது நல்லது. ஒரே ராசியினர் திருமணம் செய்தால், அந்த ராசிக்கு ஏழரை சனி, அஷ்டம சனி வந்தால் இருவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். என்பதால் ஏக ராசி சேர்ந்த ஜாதகத்தார் திருமணம் செய்து கொள்வது நல்லது.

இருப்பினும் காதல் திருமணம் என்பது பெற்றோரின் கை மீறி நடப்பதால், இதுபோன்ற பொருத்தத்தைப் பார்ப்பது கிடையாது. இப்படி ஒரே ராசியைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அதே ராசியாக அமைந்தால் ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியுடன் இருப்பர். இந்த சமயத்தில் நற்பலன்கள் அமைந்தால் மூவருக்கும் சிறப்பாக இருந்தால், ஏழரைச் சனி, அஷ்டம சனி வரும் போது மூவரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக திடீர் விபத்து அல்லது இழப்புகள் ஏற்படக் கூடும்.

ஒரே குடும்பத்தில் பிறந்த மூவருக்கும் ஒரே ராசியாக அமைந்துவிடும்பட்சத்தில் , அவர்கள் ஆண்டுதோறும் சம்ஹார ஸ்தலமான திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்து வருவது சிறந்த பரிகாரம் என பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது ஏதேனும் கடற்கரை பகுதியில் இருக்கும் சம்ஹார ஸ்தலங்களில் சுவாமி தரிசனம் செய்து வருவது நல்லது.

குடும்பத்தில் மூன்று நபர்களுக்கு ஒரே ராசியாக அமைந்துவிட்டால், அதன் மூலம் பல பிரச்சினைகள் வரலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் கணவன், மனைவி பணி இட மாற்றம் பெற்று வேறு வேறு இடத்தில் வசிப்பது நல்லது. மகன் அல்லது மகள் படித்துக் கொண்டிருந்தால் அவர்களை உறவினர் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். இதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். குறிப்பாக ஏழரைச் சனி, அஷ்டம சனி நடக்கும் போது இவர்கள் மூவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம்.

Kokila

Next Post

மக்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்க...! பாலஸ்தீன அதிபருடன் தொலைபேசியில் உரையாடி பிரதமர் மோடி...!

Fri Oct 20 , 2023
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு போரை தொடங்கி உள்ளது. இந்த இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸுக்கு ஆதரவாக முழு வீச்சில் ஈரான் செயல்பட்டு […]

You May Like