விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது வார எவிக்ஷனுக்காக ஓப்பன் நாமினேஷன் வைத்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த வார எலிமினேஷனில் 11 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரான விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டு அவர் வெளியேறியுள்ளார். அதன்படி, விஜய் வர்மா எலிமினேட் ஆன பின்னர் தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
அத்துடன், இந்த சீசனில் 4-வது வாரத்திலேயே ஓப்பன் நாமினேஷன் வைத்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ். இதன் போது யாரை தட்டி தூக்கலாமென பேச்சுவார்த்தை நடத்திய கூல் சுரேஷின் டீம், ‘பிரதீப்பை மட்டும் வோட் போட்டு வேஸ்ட் பண்ண வேண்டாம்.. வினுசா, ஜோவிகா இவங்கல அட்டேக் பண்ணலாம். அதேபோல யுகேந்திரனையும் விட்டுவிடக் கூடாது அவரையும் நாமினேஷனுக்கு கொண்டு வந்துவிடலாம். அதுக்கப்புறம் மக்கள் பார்த்துக் கொள்ளுவாங்க’ என விஷ்ணு, கூல் சுரேஷ், சரவணன் விக்ரம் ஆகியோர் பிளான் பண்ணிட்டு இருக்காங்க.
இதையடுத்து, கூல் சுரேஷ் சொல்கிறார் ‘எனக்கு இந்த மாதிரி ஒப்பினியன் இல்லை. நீங்க யாரை சொல்றீங்களோ அவங்களுக்கே நானும் ஓட் போடுறன்’ என்றார். இதற்கிடையே, பிரதீப் சொல்லுகிறார், ‘நீங்க எல்லாம் இப்படி மனக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீங்க, நாளைக்கு ஓபன் நாமினேஷன் செய்தா என்ன செய்வீங்க’ என்று, இதற்கு யுகேந்திரன் ‘அதே மாதிரி வைக்கிறதுக்கு வாய்ப்பே கிடையாது எதை வச்சு அப்படி சொல்றானு’ கேக்க, ‘நான் எல்லா பிக்பாஸையும் பார்த்திருக்கேன். ஓபன் நாமினேஷன் வைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு’ என்று சொல்லுகிறார் பிரதீப். இனி என்ன நடக்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.