fbpx

நாளை முதல்  இந்த ரயில் கோவை செல்லாது!!

ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் நாளை முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை 23 நாட்களுக்கு கோவைக்கு செல்லாது என்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், மூன்றாவது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். இந்த ரயில் கோவைக்கு மதியம் 12.20 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 1.10 மணிக்கும் வந்தடையும்.

நாளை (நவ.16-ம் தேதி) முதல், டிசம்பர் 8-ம் தேதி வரையிலான 23 நாட்கள் போத்தனுார் – கோவை இடையே பொறியியல் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதனால், ஆழப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காட்டில் இருந்து கோவை வரும் வழியில் போத்தனுாரில் நிறுத்தப்படுகிறது. போத்தனுாரில் இருந்து இருகூர் வழியாக திருப்பூர் வந்து சேரும் இந்த ரயில், இந்நாட்களில் கோவை ஸ்டேஷன் செல்லாது என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Post

பெண் பார்க்கும் படலம்… 230 பெண்களுக்கு 14,000 மாப்பிள்ளைகள்…

Tue Nov 15 , 2022
பொதுவாக வரன் பார்க்கும் நிகழ்வின்போது இரு வீட்டாரும் பேசி வைத்து பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்ப்பது வழக்கம். இந்நிலையில் 230 பெண்களை பார்க்க 14,000 பேர் குவிந்தனர். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ஆதிசுஞ்சுனகிரி மடத்தின் சார்பில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 230 பெண்கள் மணமகன் தேவை என இந்த அமைப்பில் பதிவு செய்தனர். இந்த பெண்களை […]

You May Like