fbpx

நோய் பரவும் அபாயம்…! உடனே கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போட வேண்டும்…!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; ஆட்டுக் கொல்லிநோய் (Peste des Petits Ruminants PPR) வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாகும். இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீர், கண்ணீர், கழிச்சல் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் மிகவிரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். நோயினால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீர்வடியும். தும்மல் மற்றும் இருமல் பிறகு ஆரம்பிக்கும். அவைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில், நோயினால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள். செம்மறி ஆடுகளுக்கு மூச்சிரைக்கும். காய்ச்சல் வரும். இறுதியில் கழிச்சல் கண்டு ஆடுகள் இறந்து போகும்.

நோய்தாக்கிய ஆடுகளில் நோயின் அறிகுறிகள் ஆறு நாள்களுக்கு இருக்கும். குட்டிகளில் அதிக இறப்பு ஏற்படும். இதனால் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்போர்க்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை தடுப்பூசிப்பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால், கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் ஆட்டுக்கொல்லிநோய் ஒழிப்புத் திட்டத்தின் தடுப்பூசிப்பணிகள், 11.11.2024 முதல் தொடங்கி 30 நாள்களுக்கு. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லிநோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆடுகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது, 4 மாதத்திற்கு குறைவான வயதுள்ள ஆட்டுக்குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து வெள்ளாடுகள். செம்மறி ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக்கொல்லி நோய்தடுப்பூசி போடப்படுவதுடன் தேசிய மின்னணு கால்நடை இயக்க தரவுகளின்படி தடுப்பூசி போடப்படும் அனைத்து ஆடுகளுக்கும் பார்கோடுடன் கூடிய காதுவில்லைகள் அணிவித்து பாரத் பசுதான் செயலியில் தடுப்பூசி போடப்பட்ட ஆடுகள் விவரங்கள். உரிமையாளர்கள் விவரங்கள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

This vaccine should be given to livestock immediately.

Vignesh

Next Post

சூப்பர் திட்டம்..! 8 சதவீத வட்டி மானியம்... ரூ.15,000 வழங்கும் மத்திய அரசு...! முழு விவரம்

Thu Nov 14 , 2024
8 percent interest subsidy... Central government to provide Rs. 15,000

You May Like