fbpx

சுவையான இந்த வடை செய்ய, 10 நிமிஷம் போதும்.., மாவு அரைக்க தேவையில்லை….

வடை யாருக்கு தான் பிடிக்காது. சூடான வடையும் டீயும் சாப்பிடுவது ஒரு தனி சுகம். என்ன தான் வடை பிடித்தாலும் பெரும்பாலும் அதை யாரும் வீட்டில் செய்வதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் வடை செய்ய அதிக நேரமாகும். அனால் வெறும் 10 நிமிடத்தில் வடை செய்து விடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், சுலபமாக எப்படி வடை செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

முதலில், அவல் 1 கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதை 3 முதல் 4 முறை தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து, அவல் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிடுங்கள்.. பின்னர் ஊற வைத்த அவளை தனியாக எடுத்து நன்கு பிழிந்து விடுங்கள். அதில் பச்சரிசி மாவு 4 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து, பின் ரவை 1 கப் அளவு அதில் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள்.. இப்போது பிசைந்த மாவில், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், சிறு துண்டு இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து மீண்டும் நன்கு பிசைந்து விடுங்கள்..

இப்போது வடை செய்ய மாவு தயார்.. இப்போது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றுங்கள். பின் எண்ணெய் சூடேறியதும், அடுப்பை மிதமான தீயில் வைத்துவிடுங்கள். பிறகு உள்ளங்கையில் தண்ணீரை தொட்டுக் கொண்டு தயார் செய்து வைத்துள்ள மாவை வடை போல் தட்டி எண்ணெயில் போடவும். இரு புறமும் நன்கு வெந்ததும் அதை எண்ணெயில் இருந்து எடுத்து விடுங்கள்.. இப்போது சுவையான வடை ரெடி..

Maha

Next Post

மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை, மதிய உணவு திட்டம்...! அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Fri Oct 13 , 2023
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி, மதிய உணவு தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எழுதி உள்ள கடிதத்தில்; பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக் கூடாது உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த நன்னெறிகளை, அவ்வப்போது இறைவணக்கக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும், புகையிலை மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும் அறிவுரைகள் வழங்க […]

You May Like