ஜப்பானிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா பாதிப்பின் புதிய வடிவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லான்செட் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ‘பைரோலா’ அல்லது பிஏ.2.86 வடிவம் பற்றி முக்கியமான முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவை சேர்ந்த நபர் இந்த புதுவித கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.
இந்தியா மட்டுமில்லாமல் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பரிக்கா நாடுகளிலும் இந்த புதிய கொரோனா பாதிப்பின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு அமைப்பை அழிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகக் கொடிய வைரஸாக இது உள்ளது.
முந்தைய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக சிரமமின்றி செயல்பட்ட ஆன்டிபாடிகள் இந்த விஷயத்தில் பயன் அளிக்காது என்று நிரூபிணம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்காக 3-வது டோஸ் எடுத்துக் கொண்டவர்களிடம் இருந்து ஆய்வு மாதிரி சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஆன்டிபாடி பயனற்றது என்பது தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பைரோலர் ஸ்பைக் புரதம் ஏற்கனவே 30 முறை மாற்றப்பட்டுள்ளது. மற்ற வைரஸ்களுடன் இது சற்று அதிகம்.