fbpx

இந்த வாரம் கமலிடம் வசமாக சிக்கப்போகும் பிரதீப்..!! கண்டித்த ஹவுஸ்மேட்ஸ்..!! நடந்தது என்ன..?

பிக்பாஸ் சீசன் 7 துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதில் விஷ்ணு, பவா செல்லத்துரை, விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பிரதீப், ஜோவிகா, அனன்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஆனால், கடந்த வாரம் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாவா செல்லதுரையும் தாமாக முன்வந்து வெளியேறினார்.

இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரு நபரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பும்படி ஸ்மால் பாஸ் வீட்டினர் கேட்டிருந்தனர்.

பின்னர் கேப்டன் விக்ரம் நானே வந்து உங்க வேலையை செய்கிறேன் என கூறி ஸ்ட்ரைகை முடிவுக்கு கொண்டு வந்து அனைவருக்கும் சமைத்தும் பரிமாறினார். இதுஒரு புறம் இருக்க சண்டை நடந்து கொண்டிருக்கும் போது இடையில் சரவணனின் வாயை உடைத்து விடுவேன் என்று தெரிவித்திருந்தார் பிரதீப்.

இது வன்முறை பேச்சு என கூறி பிக்பாஸ் வீட்டினர் கண்டித்தனர். இதை கவனித்த ரசிகர்கள், இந்த வாரம் ரெட் கார்டு பிரதீப் வாங்க போகிறார் என கூறி வருகின்றனர். கமல்ஹாசன் இதுகுறித்து என்ன முடிவு எடுக்க போகிறார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் இப்படிப் பேசியதற்காக விஜய்யை கமல்ஹாசன் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கண்மூடித்தனமான தாக்குதல்..!! பறிபோன 447 பிஞ்சு குழந்தைகளின் உயிர்..!! மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

Fri Oct 13 , 2023
ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்து உதவினர். ஆனால், ஐநா சபை 1947ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் நாட்டை உருவாக்கினர். […]

You May Like