fbpx

“ 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் இது நடந்தே தீரும்..” அடித்து சொல்லும் சசிகலா

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக இணைப்பு நடக்கும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்..

மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா “ ஒரு கட்சியில் 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது.. திமுகவில் அப்படி முடிவெடுக்கலாம்.. ஆனால் அதிமுக மிகப்பெரிய கட்சி.. பாஜக அலுவலகம் செல்லும் நிலையில் அதிமுக இல்லை.. இதை புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்திக்க முயற்சித்து வருகிறேன்.. அதிமுக தொண்டர்களின் குமுறலை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய முடியாது.. பொது செயலாளர் என்பது தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவி.. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக இணைப்பு நடக்கும்..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து ஸ்டாலினை விமர்சித்த அவர் “ தேர்தல் பிரச்சாரத்தின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று கூறிய ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, அதனை பூட்டி, அந்த சாவி என்னிடம் இருக்கும்.. ஆட்சிக்கு வந்ததும் குறைகளை தீர்ப்பேன் என்றார்.. ஆனால் அந்த பெட்டி திறக்கப்படவே இல்லை.. ஒருவேளை சாவி தொலைந்துபோய்விட்டது போல.. நாம் என்ன கைக்குழந்தையா..? நம்மை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.. யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.. யாராலும் என் நிழலை கூட நெருங்க முடியாது.. திமுகவை வீழ்த்த அனைவரும் கைக்கோர்க்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

’யாரு சாமி நீ’..!! திடீரென மேம்பாலத்தில் இருந்து பெய்த பண மழை..!! வைரலாகும் வீடியோ..!!

Tue Jan 24 , 2023
கே.ஆர். மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கே.ஆர். மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணத்தை தூக்கி வீசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கருப்பு நிற உடை அணிந்த அந்த நபர், அவரது கழுத்தில் கடிகாரம் ஒன்றை தொங்க விட்டபடி, அவர் வைத்திருந்த பையில் இருந்து 10 […]
’யாரு சாமி நீ’..!! திடீரென மேம்பாலத்தில் இருந்து பெய்த பண மழை..!! வைரலாகும் வீடியோ..!!

You May Like