தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல் புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (30) திமுகவின் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கினார் அந்த புகாரில் என்னுடைய முகநூல் பக்கத்தை பார்த்த போது செல்வபாலா என்பவரின் பதிவு அதில் இருந்தது.
அந்தப் பதிவில் காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று கொண்டிருப்பது போலவும், அவருக்கு முன்னால் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோதங்கராஜ், செந்தில் பாலாஜி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் போன்றோர் மேலாடை இன்றி அரை நிர்வானமாக கைகட்டி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இருந்தார். அதோடு அந்த புகைப்படத்தில் அண்ணாமலையின் ஆட்டம் ஆரம்பம் மொத்த திராவிடியன்கள் கதறல் என்று பதிவிட்டு இருந்தார் என கூறியிருக்கிறார்.
இது போன்ற அவதூறுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்த நாகர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவதூறாக பதிவிட்ட தூத்துக்குடி பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்த செல்வ பாலன்(29) என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.