fbpx

பசுவைக் கொல்பவர்கள் நரகத்தில் அழுகியவர்களாக கருதப்படுவார்கள்.. உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து..

பசுவைக் கொல்பவர்கள் நரகத்தில் அழுகியவர்களாக கருதப்படுவார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பசு இறைச்சியை விற்பனைக்கு கொண்டு சென்றதற்காக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நபர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த மது நீதிபதி ஷமின் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது இந்து மத நூல்களை மேற்கோள் காட்டிய நீதிபதி, பசு வதையை தடை செய்து பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கும் வகையில் நாடு முழுவதும் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

மேலும் “ இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால் அனைத்து மதங்களையும் மதிப்பது முக்கியம்.. பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நம்பும் இந்து மதம் உட்பட அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும், அது தெய்வீக மற்றும் இயற்கை நன்மையைக் குறிக்கிறது. பசுவைக் கொல்பவர்கள் நரகத்தில் அழுகியவர்களாக கருதப்படுவார்கள்..”” என்று தெரிவித்தார்..

மேலும், பசு வதையைத் தடுக்கவும், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக அறிவிக்கவும் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. பசுவின் முக்கியத்துவத்தையும் சுத்திகரிப்பு மற்றும் பஞ்சகவ்யா உட்பட பசுவில் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்களான பால், வெண்ணெய், தயிர், சிறுநீர் மற்றும் சாணம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்தும் நீதிபதி பேசினார்..

Maha

Next Post

’இனி சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கம்’..!! கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

Sun Mar 5 , 2023
சென்னை மாநகரில் 625 வழித்தடங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. தினசரி 30 லட்சம் பேர் வரை இந்தப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தனியார், அரசுப் பேருந்துகளை `Gross Cost Contract’ என்ற முறையின் அடிப்படையில் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஆய்வுக்குழுவைவும் அமைத்திருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், […]

You May Like