fbpx

அரசு பள்ளியில் பணியாற்றும் இவர்களுக்கு மற்ற வேலைகள் வழங்க கூடாது…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு இதர பணிகளை வழங்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பள்ளி கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில்; அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அடல் டிங்கரிங் ஆய்வகம் (மத்திய அரசின் நிதியுதவி), உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை, பாடம் சார்ந்த இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள், மொழி ஆய்வகங்கள், தொழிற்கல்வி மற்றும் கணித ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வகங்கள் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை படைக்கும் திறனைமேம்படுத்துவதற்கு உந்துதலாகஅமையும். இத்தகைய பள்ளிஆய்வகம் மற்றும் அதன் உபகரணங்களை முறையாக பராமரித்து வருவதில் ஆய்வக உதவியாளர்கள் பங்களிப்பு மிகவும்அவசியமாகிறது. எனவே, ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், பாடத்திட்ட அடிப்படையில் ஆய்வக செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அதனுடன் ஆய்வக பராமரிப்புபணிகளில் முழு கவனம் செலுத்திடும் வகையில் ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களுக்கான பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளா..? உண்மை என்ன..!

Sun Feb 4 , 2024
அந்த காலத்தில் அனைவருமே தலையில் அமர்ந்து சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நம் வீடுகளில் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மை. தரையில் அமர்ந்து இலையில் சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நன்மைகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்? பொதுவாக தரையில் கால்களை மடித்து  உட்காருவது ஒருவகையான யோகா பயிற்சியாக இருந்து வருகிறது. மேலும் உணவு உண்ணும் போது உணவு அளித்த […]

You May Like