14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும்.
வயதுக்கு மீறிய திருமணங்கள் மற்றும் தாய்மை அடைவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வலியுறுத்தினார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும் என்பதால் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர்; பெண்கள் “தகுந்த வயதில்” தாய்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றார். குழந்தைத் திருமணங்கள் மற்றும் வயதுக்குட்பட்ட தாய்மையைத் தடுக்க, கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதற்கும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.
இதனால் அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள், ஏனெனில் 14 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும், சட்டப்பூர்வமாக திருமணமான கணவராக இருந்தாலும் கூட கயிறு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு பெண்ணின் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 18 ஆகும், மேலும் இளம் பெண்களை திருமணம் செய்பவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆண்கள் பலர் ஆயுள் தண்டனையை சந்திக்க நேரிடும் என்று அசாம் முதல்வர் எச்சரித்துள்ளார்.