fbpx

மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

’மாண்டஸ்’ புயல் எதிரொலியால் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும், அவ்வப்போது 85 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

இதற்கிடையே, ’மாண்டஸ்’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மிக அதிகனமழை பெய்யும் என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இருமல் வந்ததன் விளைவு.. நான்கு விலா எலும்புகள் முறிவு..!

Fri Dec 9 , 2022
சீனா நாட்டில் ஷாங்காய் என்ற பகுதியில் ஹுவாங் என்ற பெண் காரமான உணவுகளை அருந்திக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்துள்ளார். இவ்வாறு இருமிக்கொண்டே இருந்ததால் உடலின் மார்பு பகுதியில் ஏதோ எலும்பு முறிந்ததை போன்ற சில சத்தத்தை அவர் கேட்டதாக கூறியுள்ளார்.   இதனை முதலில் எளிதாக எடுத்துக் கொண்டார். ஆனால் தொடர்ந்து தன்னால் பேச முடியாமலும், மூச்சு விடும் போது மார்பு பகுதியில் வலியையும் ஹுவாங் […]

You May Like