fbpx

அச்சுறுத்தும் தட்டம்மை..!! பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மும்பையில் தட்டம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டியில் கடந்த மாதம் தட்டம்மை நோயால் குழந்தைகள் பலியாகி உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர். அந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பாதிப்புள்ளது கண்டறியப்பட்டது. இந்த தகவல் அறிந்த மத்திய சுகாதாரத்துறை குழு அதிகாரிகள் மும்பைக்கு வந்து நேரடியாக பரிசோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், மும்பையில் இதுவரையில் தட்டம்மை நோயினால் 12 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

அச்சுறுத்தும் தட்டம்மை..!! பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி கோவண்டி பகுதியைச் சேர்ந்த 8 மாத ஆண் குழந்தைக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த குழந்தை கடந்த 24ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால் மும்பையில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்காக கஸ்தூர்பா மருத்துவமனை மற்றும் சிவாஜி நகர் மருத்துவமனையில் தற்போது 40 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயை தடுக்கும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தை பொறுத்தவரையில் தட்டம்மை உறுதிபடுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 603 ஆக உள்ளது.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அமானுஷ்யம்..!! ரத்தம் ரத்தம்..!! நடுராத்தியில் ஹவுஸ்மேட்ஸ்களை அலறவிட்ட அமுதவாணன்..!!

Sat Nov 26 , 2022
ரத்தம், ரத்தம் என அமுதவாணன் தூக்கத்தில் உளறியதால், பக்கத்தில் படுத்திருந்த மணிகண்டன் அலறி அடித்து ஓடிய சம்பவம் போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் வீட்டில் நேற்றிரவு அமுதவாணன், தனது படுக்கையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவருடன் கட்டிலில் ஒன்றாக தூங்குபவர் மணிகண்டன். அவர் வெளியில் சிறையில் அடைக்கப்பட்ட ராபர்ட் மாஸ்டருடன் பேசிவிட்டு படுக்கைக்கு திரும்பினார். அமுதவாணன் பக்கத்தில் படுத்த சில நிமிடங்களில் படுக்கையில் இருந்தவாரே மைனாவிடம் ஏதோ சொன்னார். அவர் முகத்தில் […]
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அமானுஷ்யம்..!! ரத்தம் ரத்தம்..!! நடுராத்தியில் ஹவுஸ்மேட்ஸ்களை அலறவிட்ட அமுதவாணன்..!!

You May Like