fbpx

அதிமுகவை மீட்க மூவர் கூட்டணி..! பக்கா ஸ்கெட்ச் போடும் சசிகலா..! கதிகலங்கும் எடப்பாடி..!

மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து சசிகலா கருத்துக் கேட்டு வருகிறார்.

அதிமுகவை மீட்கும் பொருட்டு வி.கே.சசிகலா பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து உரையாடி வருகிறார். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு சரி செய்யப்படும் எனவும் தனது தலைமையில் அதிமுக ஒன்றிணையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீட்க மூவர் கூட்டணி..! பக்கா ஸ்கெட்ச் போடும் சசிகலா..! கதிகலங்கும் எடப்பாடி..!

இந்த நிலையில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகம் எழத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைய வேண்டும் என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். இந்த சூழலில் சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். மேலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள சசிகலா, அதற்கு முன்னோட்டமாக தொண்டர்களை சந்திப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

தனியார் பள்ளி நிர்வாகத்தின் அராஜகம்.. கட்டணம் செலுத்தாத மாணவர்களை; வகுப்பறையில் அடைத்து வைத்த கொடூரம்..!

Wed Aug 24 , 2022
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 34 மாணவர்கள் பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று சொல்லி அவர்களை நேற்று முன்தினம் ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்துள்ளனர். ஐந்து மணி நேரம் அந்த மாணவர்களை சாப்பிட, தண்ணீர் குடிக்க, கழிப்பறை செல்ல கூட அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர். பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் கூறிய […]
தமிழக அரசின் ’நம்ம ஸ்கூல்’ திட்டம்..!! அரசுப் பள்ளிகளில் இப்படி ஒரு வசதியா..?

You May Like