அண்மையில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் அடிப்படையில் மூன்று குறை தீர்வு மேல்முறையீட்டுக் குழுக்களை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிவிப்பின்படி, தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மூன்று மேல்முறையீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஐடி விதிகள், நீதிமன்றங்களைத் தவிர, குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை உருவாக்குவதற்கும், புதிய பொறுப்புக்கூறல் தரங்களை உறுதி செய்வதன் மூலம் இந்திய குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகள் எந்தவொரு பெரிய தொழில்நுட்ப தளத்தாலும் மீறப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் வகை செய்கிறது.
மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஐடி விதிகள் குறித்த விரிவான பொது ஆலோசனையின் போது, ஒவ்வொரு டிஜிட்டல் குடிமக்களின் பாதுகாப்பும் நம்பிக்கையு, வலுவான குறை தீர்க்கும் முறைமையும் பற்றிய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அனைத்து குறைகளும் 100% தீர்க்கப்பட வேண்டும் என்ற வகையில் ,ஒரு சேவை அல்லது தயாரிப்பை வழங்கும் அனைத்து இணைய தளங்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவது ஒரு தெளிவான இலக்காக இருந்ததாக அவர்எ கூறினார்.