fbpx

நெல்லையில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் குளிக்க சென்ற 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், நெல்லை ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரது மகன் அருண்குமார் (17), டக்கர்மார்புரத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவரது மகன் நிகில் (17), கொக்கங்கந்தான் பாறையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் ஆண்ட்ரூஸ் (17) ஆகிய மூன்று பேரும் ஜோதிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.

இவர்கள் மூன்று பேரும், இவர்களது நண்பரது இல்ல கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகூர்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்றுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, மாணவர்கள் ஆறு பேர் இணைந்து வெள்ள நீர் கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஆண்ட்ரூஸ், அருண்குமார், நிகில் ஆகிய மூன்று பேரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் அவர்களைக் காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் முன்னீர்பள்ளம் போலீசார், தண்ணீரில் மூழ்கிய ஆண்ட்ரூஸ் மற்றும் அருண்குமார் ஆகிய இரண்டு பேரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு நிக்கிலை சடலமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து, இது குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Read more ; விசிகவுக்கு ஆதரவு அளிக்கும் பாஜக..!! எச்.ராஜா சொன்ன மேட்டர்? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 

English Summary

Three school students who went to bathe in the Thamiraparani flood canal near Munneerpallam in Tirunelveli district have died

Next Post

அட்ராசக்க.. இனி UPI மூலம் 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம்..!! செப்.16 முதல் புதிய விதி.. இத கட்டாயம் தெரிஞ்சுக்கோ..!!

Sun Sep 15 , 2024
From Sept 16, users can send funds up to Rs 5 lakh via UPI for some transactions. All you need to know

You May Like