வங்கி மோசடி வழக்கில் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ செந்தில் குமாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், தனசேகர், கருணாநிதி (எஸ்ஜெஎஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள்) மற்றும் ஜெ முரளி, பி லதாபாஸ், செந்தில்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனம் மற்றும் எஸ்ஜெஎஸ் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீது 06.02.2008 அன்று இந்தியன் வங்கி அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.