fbpx

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.. ஈரோட்டில் அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

நள்ளிரவில் திடீரென புகுந்த கள்ளக்காதலன்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த மாமனார் - மாமியார்..!! நடந்தது என்ன..?

Tue Apr 11 , 2023
டெல்லியில் பாகிரதி விஹார் பகுதியில் இரட்டைக் கொலை நடந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு சென்று பார்த்தபோது, வயதான தம்பதியர் இருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்திருக்கின்றன. வயதான தம்பதியரை கொன்றுவிட்டு மர்ம கும்பல் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ராதே சியாம் வர்மா என்கிற 72 வயது முதியவரும், அவரது மனைவி வீணா என்கிற 68 வயது […]

You May Like