தமிழ் திரையுலகின் தற்போதைய காலகட்ட சாம்பவான்களாக விளங்கி பெரும் அஜித், விஜய் போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இந்தியாவை கடந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ் திரை துறையின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக பொங்கலின்போது வெளியான திரைப்படங்கள்தான் துணிவும், வாரிசும்.இந்த 2 திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்தது என்ற பேச்சு தான் இந்த திரைப்படங்கள் வெளியான முதல் நாளிலிருந்து பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த 2 திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றனர். மலேசியாவில் எந்த திரைப்படம் இதுவரையில் அதிக வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது. என்பது தொடர்பான தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதனை அடிப்படையாகக் கொண்டு துணிவு திரைப்படம் இதுவரையில் 16 கோடி வரையில் வசூல் செய்திருக்கிறது. ஆனால் வாரிசு திரைப்படம் 18 கோடி வசூலித்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சற்றே துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படம் வசூலில் முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.