சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 31-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை- குஜராத் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3-ம் தேதி இந்த போட்டியானது நடைபெற உள்ளது.
போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்கும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது. காலை 9.30 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்பனை நடைபெறும். டிக்கெட் விலை ரூ.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.