அமெரிக்காவில் உள்ள ஓஹியோவைச் சேர்ந்த ஜேக்கப் ஸ்டீவன்ஸ் என்ற 13 வயது சிறுவன், TikTok ட்ரெண்ட் – Benadryl சேலஞ்சை முயற்சித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக்கில் “Benadryl Challenge” எனப்படும் இந்த ட்ரெண்டில் ஆண்டிஹிஸ்டமைன் எனும் போதை மாத்திரைகளை டிக்டாக் வீடியோ செய்து கொண்டே உட்கொள்ள வேண்டும். அந்த மாத்திரைகளை உட்கொள்ளும் போது உடலுள் ஏற்படும் மாற்றத்தையும், வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இதுவே இந்த ட்ரெண்டின் விதியாகும். ஜேக்கப் ஸ்டீவன்ஸ்(Jacob Stevens) என்ற அந்த சிறுவன் போதை அடைவதற்காக 12 முதல் 14 மாத்திரைகளை உட்கொண்டார், அதனால் அவரது உடலில் ஆண்டிஹிஸ்டமைனின் அளவு உச்சத்தை அடைந்துள்ளது. அதிர்ச்சி என்னவென்றால், அந்தச் சிறுவன் சவாலை ஏற்று மாத்திரயை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அவனது தோழர்கள் அருகில் நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதனால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, மயக்க நிலை அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒருவாரம் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தான் என்று சிறுவனின் தந்தை கூறினார். மூளை ஸ்கேன் இல்லை, அங்கு எதுவும் இல்லை. நாங்கள் அவரை காற்றோட்டத்தில் வைத்திருக்கலாம், அவர் அங்கே படுத்துக் கொள்ளலாம், ஆனால் அவர் ஒருபோதும் கண்களைத் திறக்க மாட்டார், அவர் ஒருபோதும் சுவாசிக்கவோ , புன்னகைக்கவோ, நடக்கவோ அல்லது பேசவோ மாட்டார் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
அது அவரது உடலுக்கு மிகவும் அதிகமாக இருந்தது,” என்று ஜேக்கப்பின் தந்தை கூறியுள்ளார். ஜேக்கப்பின் தந்தை, ஜஸ்டின் ஸ்டீவன்ஸ், ABC6 இடம், தனது மகன் கடந்த வார இறுதியில் நண்பர்களுடன் வீட்டில் இருந்ததாகக் கூறினார். மேலும், “இன்னொரு குழந்தைக்கு இது போல் நடக்காமலிருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன்” என்று ஜேக்கப்பின் பாட்டி கூறியுள்ளார்.