fbpx

மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம்…? இதுவரை எத்தனை பேர் இணைத்துள்ளனர்…?

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்.

ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த மாதம் 31-ம் தேதி வரை மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே கால அவகாசம் கொடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.30 லட்சம் பேர் இணைத்துள்ளனர். மேலும் ஆன்லைனில் மூலம் 1.39 லட்சம் பேரும், இது வரை மொத்தம் 1.52 கோடி பேர் இணைத்துள்ளனர். இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

அற்புதமான வாய்ப்பு...! TNPSC, TRB-க்கு 38 மாவட்டத்திலும் இலவச பயிற்சி வகுப்பு....! உடனே விண்ணப்பிக்கவும்...!

Thu Dec 29 , 2022
TNPSC, RRB போன்ற அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, RRB, IBPS, TNUSRB, SSC, TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் […]

You May Like